மகா சங்கத்தின் கோரிக்கை சிறீலங்கா தொழிலாளர் தினத்தை மே 7 ஆம் திகதி கொண்டாடுகிறது !

0
354

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி சிறீலங்கா அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சிறீலங்கா உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
மே 7 ஆம் திகதியை அரச மற்றும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத் தை முன்னிட்டு இம்முறை சர்வதேசதொழிலாளர் தினத்தை பிற்போடுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சர்வதேச தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here