குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகிய இவரது பயணம் மிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நீண்டகாலப் போராட் டம் சம்பந்தமான காட்சிகளை இன்றும் பார்க்ககூடியதாக இருக்கும். அந்த படப்பிடிப்பாளர்களில் குணாளன் மாஸ்டரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார்..
கடந்த 29.03.2018 அன்று சுவிசில் சாவடைந்த குணாளன் மாஸ்டரின் இறுதி வணக்க நிகழ்வு கடந்த திங்கள் கிழமை (09.04.2018) சுவிசில் இடம் பெற்றது.