ஜெயக்குமாரியும் மகள் விபூசிகாவும் கிளிநொச்சியில் சந்தித்தனர்!

0
143

jeyakumariஒருவருட காலத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் மகள்  விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டனர். மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தனது மகளை நேற்று கிளிநொச்சியில் சந்தித்தார்.

விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தார் என்று கூறி  கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.   எனினும்  அவர் கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்  விடுதலைத் தினத்தில் அவரிடம் வழங்கப்படவில்லை. அதனால் உடனடியாக கிளிநொச்சிக்கு வருகைதர அவரால் முடியவில்லை.

தனது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை அவரது ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயக்குமாரி உடனடியாக கிளிநொச்சிக்கு வருகை தந்து தனது மகளைச் சந்தித்தார்.

இதேவேளை, விளக்கமறியலில் இருக்கும் போது விபூசிகா தனது தாயாரை நான்கு தடவைகள் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here