இன்று திங்கட்கிழமை (16.03.2015) பிரான்சிலிருந்து ஜெனிவாநோக்கி தொடருந்து புறப்படுகிறது. ஜெனிவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாசு திடலில் நடைபெறவுள்ள நீதிக்கான மாபெரும் பேரணியும், ஒன்றுகூடலும்.
அன்பான தமிழீழ மக்களே!
இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் தான் ஏற்பட்டிருக்கின்றது. ஆட்சியாளர்கள் மாறவில்லை என்பதை ஒவ்வொரு தமிழர்கள் நீங்கள் அறிவீர்கள். வரும் 2015ம் ஆண்டு எமது தேசியம் நோக்கிய சனநாயக அரசியல் ரீதியான போராட்டம் இன்னும் இன்னும் வீரியம் பெறவேண்டும். ஒவ்வொரு போராட்டங்களும் தமிழீழ மக்களின் அபிலாசைகளை வீரியத்துடன், ஆணித்தரமாகவும், எழுச்சி பூர்வமாக சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும். சிங்கள பேரினவாத அரசுகளின் பிடியில் சிக்குண்டு போயுள்ள எமது மக்களின் வாழ்வாதரத்திற்கு தொடர்ந்து உதவிக்கரம் கொடுக்க வேண்டும். அடிமைத்தனத்திற்குள் வாய்பேச முடியாத நிலையில் வாழும் எமது மக்களை மீட்க வேண்டும்.
எமது தாயகம் தேசியம் தன்னாட்சி எங்கள் கைகளில் வரும் போதுதான் இவ்வாறான அடிமைத்தனமும், உயிர் இழப்பும்,துன்புறுத்தலும் நிறைவுக்கு வரும் களத்திலும், புலத்திலும் தமிழ்மக்களின் எழுச்சியும், முகிழ்ச்சியுமே ஒரு நிம்மதியான விடிவை தமிழர்கள் எமக்கு பெற்றுத் தரும் அதற்காக தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தொடர்ந்து தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து போராடுவோம் ; புறப்படுவோம்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு