முல்லைத்தீவு -வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இருந்த சிறீலங்கா இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன சிறீலங்கா இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் வட்டுவாகல் பகுதியை ஆக்கிரமித்த சிறீலங்கா இராணுவத்தினர் உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர்.
9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் சிறீலங்கா இராணுவத்தினரால் நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.