ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக வந்த மகுளுந்து புகுந்ததில் பலர் பலி !

0
429

ஜே ர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று காலை மக்கள் கூட்டத்துக்குள் சாலையில் வேகமாக வந்த மகுளுந்து புகுந்ததில், பலர் பலியாகி இருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது தீவிரவாதிகள் தாக்குதலா அல்லது ஏதேச்சையாக நடந்த விபத்தா என்பது குறித்து முன்ஸ்டர் நகர காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர். இந்தவிபத்தில் மகுளுந்து ஓட்டுநர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்ஸ்டர் நகரில் இன்று காலை வழக்கம் போல் மக்கள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, சாலையில் வேகமாக வந்த மகுளுந்து மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து நிற்காகமல் சென்றுள்ளது.
திடீரென கூட்டத்துக்குள் மகுளுந்து புகுந்ததால், மக்களால் ஓடமுடியாமல் தவித்தனர். பலர் அடிபட்டு தூக்கிவீசப்பட்டனர். இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து முன்ஸ்டர் நகர காவல்துறையினர் கூறுகையில், கூட்டத்துக்குள் மகுளுந்து புகுந்ததால், பலர் இறந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இந்த தீவிரவாத தாக்குதலா என்று இப்போது உறுதி செய்ய முடியாது. மக்கள் தாங்களாக எதையும் ஊகம் செய்து கொண்டு பதற்றம் அடையத் தேவையில்லை. மகுளுந்தை ஓட்டி வந்த சாரதி தற்கொலை செய்துள்ளார்.
அதேசமயம், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here