19 தமிழக மீனவர்கள் விடுதலை !

0
146

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறீலங்கா கடற்படையினரால்  கைது செய்யப்பட்டிருந்தனர். மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் 19 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். நல்லண்ண அடிப்படையில் 19 பேரையும் நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் 19 மீனவர்களும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here