கேப்பாப்பிலவு பகுதியில் சிறீலங்கா படையினர் வசம்இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன .
நேற்றுமுன்தினம் (04) காலை கேப்பாபபிலவு மேற்கு பகுதியில் உள்ள வீதி ஓரமாக விடு விக்கப்பட்ட காணி பற்றைக்காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் நிலத்தில் மறைந்து கிடந்த குண்டுகளை இனம் கண்டுள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிட்ட நபர் முள்ளியவளை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப் ப ட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அனுமதிகோரியுள்ளார்கள்.
மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பராக் வகையான குண்டுகளை மீட்டுள்ளனர்.
81 மோட்டார் குண்டுவகையினை சேர் ந்தகுறித்த 25 பராக் குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்றும் இவற்றை நேற்று பாதுகாப்பான ஒருபகுதியில் வைத்து தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.