சிறீலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது , பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வாக்களிப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்புகள் இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கபட்டது நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குரயுப்பிடத்தக்கது .