ஐக்கிய தேசிய கட்சி ஈ.பி.டி.பி. ஆதரவுடன் மட். மாநகர சபையின் ஆட்சி அமைத்தது கூட்டமைப்பு !

0
158


மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (05) வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 21 உறுப்பினர்கள் மக்கள் தெரிவின் மூலமும் 17 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 04 உறுப்பினர்களும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 05 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு01, சுயேட்சைக்குழு02, சுயேட்சைக்குழு04 ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினருமாக 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் இருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈ.பி.டி.பி. என்பன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 25 வாக்குகளையும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் 11 வாக்குகளையும் பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் 14 மேலதிக வாக்குகளினால் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here