டியான்காங்-1 சீன விண்கலாம் கடலில் வீழ்ந்தது !

0
386

சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக சீனா கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று (02) பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.
மார்ச் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.
பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன.
விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் இயந்திரம் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ விண்வெளி நிலையம் நிறுவப்பட்டது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 1979 ஆம் ஆண்டு அமெரிக்க் விண்கலமும் 1991 இல் சோவியத் விண் கலமும் இவ் விதம் செயலற்று போயிருந்தன அதன் பின்னர் இப்போதுதான் விண்கலம் செயலற்று போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here