சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது பாதையில் இருந்து விலகி வருகிறது. நாளை (01) பெரும் அக்கினிப் பிழம்போடு அது எரிந்த வண்ணம் பூமியில் விழ உள்ளது.
இதன் மொத்த எடை சுமார் 9 தொன் ஆகும். சீனாவினால் உருவாக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக இது பூமிக்கு மேல் விண் வெளியில் சஞ்சரித்து வந்தது. ஆனால் அது மெல்ல மெல்ல தனது பாதையை இழக்க ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு இதனை மீண்டும் அதன் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு வரும் கடைசி முயற்ச்சியில் சீன விஞ்ஞானிகள் இறங்கினார்கள். இருப்பினும் அதுவும் தோல்வியை தழுவிய நிலையில்.
நாளை 12.30 மணிக்கு அது பூமி மீது வீழ உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது இதனால் பல நகரங்கள் மேல் துண்டுகள் வந்து விழ வாய்புகள் உள்ளன .