சிறீலங்கா பிரதமர் ரணில் தனது பத­வி­யினை துறக்க வேண்டும் !

0
245


நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்த விவா­தத்­திற்கு முன்னர் ரணில் தனது பத­வி­யினை துறக்க வேண்டும். இல்­லையேல் நான்காம் திகதி இரவு 9 மணி­யுடன் தேசிய அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் என சிறீலங்கா சுதந்­திரக் கட்சி திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தது.
நல்­லாட்­சியை காப்­பாற்ற வேண்­டுமா அல்­லது தனது பத­வியை காப்­பாற்ற வேண்­டுமா என்­பதை பிர­தமர் தீர்­மா­னிக்க வேண்டும், அதற்கு இரண்டு நாட்கள் காலக்­கெடு கொடுப்­ப­தா­கவும் சிறீலங்காசுதந்­திரக் கட்­சி­யினர் தெரி­வித்­துள்ளனர்..
சிறீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று (30) கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் உறுப்­பி­னர்கள் இவ்­வாறு குறிப்­பிட்­டனர்.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது நியா­ய­மான அடிப்­படை நிலைப்­பா­டு­களை கொண்ட கார­ணி­களை உள்­ள­டக்­கியே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தின் கட்சி நிலைப்­பா­டு­களை அவ­தா­னித்தால், பொதுத் தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. இதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 82 ஆச­னங்கள் உள்­ளன. ஏனை­யவை கூட்டுக் கட்­சி­களின் ஆச­னங்­க­ளாகும்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 95 ஆச­னங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு 82 ஆச­னங்­களும் கூட்­டணி கட்­சி­க­ளுக்கு ஏனைய ஆச­னங்­களும் உள்­ளன. ஆகவே பார­ளு­மன்­றத்தில் தனிக் கட்சி அங்­கீ­காரம் என்று பார்க்­கையில் சிறீலங்கா சுதந்­திர கட்­சிக்கும், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் ஆசன எண்­ணிக்கை சம­மா­கவே உள்­ளன . சிறீலங்கா சுதந்­திர கட்சி ஆளும் தரப்­பிலும் எதிர்த்­த­ரப்­பிலும் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றது. இதனைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்­சி­களும் அடுத்த இடங்­களில் உள்­ளன. இதனை கொண்டே நான்காம் திகதி வாக்­கெ­டுப்­பிலும் தீர்­மா­னங்கள் அமை­யப்­போ­கின்­றன.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்ட தீர்­மானம் ஊடாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க முடி­யாது. இந்­நி­லையில் சிறீலங்கா சுதந்­திர கட்­சியின் தீர்­மானம் என்­ன­வென்­பது குறித்து கேள்வி எழு­கின்­றது. மத்­திய வங்கி ஊழல் விவ­காரம் குறித்து சிறீலங்கா சுதந்­திர கட்­சியின் கோரிக்­கை­களை உள்­ள­டக்­கிய வகை­யிலே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. சிறீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் 9 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு இந்தக் குழு 15 கார­ணி­களை முன்­வைத்­தது.
அதற்­க­மை­யவே ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. இதனைக் கொண்டே இப்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வரையில் வந்­துள்­ளது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள கார­ணி­களில் 13 கார­ணிகள் சிறீலங்கா சுதந்­திர கட்சி சுட்­டிக்­காட்­டிய விட­ய­மாகும். ஆகவே ஒரு­போதும் எம்மால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்க்க முடி­யாது.
நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அர­சாங்கம் தோற்றால் ஜனா­தி­ப­தியும் இல்லை, பிர­த­மரும் இல்லை சபா­நா­ய­கரே பொறுப்­புக்­களை கையாள வேண்டும் என சிலர் கூறு­கின்­றனர். இவர்­களின் கருத்­துக்கள் எந்­த­வித அடிப்­ப­டையும் இல்­லா­த­வை­யாகும். அர­சியல் அமைப்பு என்­ன­வென்­பது தெரி­யாத நபர்­க­ளா­லேயே இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்க முடியும். அர­சியல் அமைப்பின் 46 ஆம் அத்­தி­யாயம் இரண்டாம் சரத்தில் இந்த விட­யங்கள் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வர முடி­யாது. அமைச்­ச­ரவை பிர­தானி என்ற வகையில் அவரை நீக்­கி­விட்டு அர­சாங்­கத்தை எவ்­வாறு கொண்­டு­செல்ல முடியும்.? ஆகவே யதார்த்­த­மாக நடை­பெறும் காரி­யங்­களை மாத்­தி­ரமே நாம் பேச வேண்டும்.
மேலும் இப்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்த கட்­சி­களின் நிலை­மை­களை கருத்தில் கொண்டால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கு 44.6 வீத வாக்­குகள் கிடைக்­கப்­பெற்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 32.5 வீத வாக்­குகள், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 9.8 வீத வாக்­கு­களும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு 3.6 வீத வாக்­குக்­க­ளு­மாக மொத்­த­மாக 14.2 வீத வாக்­கு­களும், ஜே.வி.பி க்கு 6 வீத வாக்­கு­களும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு 3 வீத வாக்­கு­களும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
இதில் சிறீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் பிரே­ர­ணையை ஜே.வி.பி ஆத­ரிப்­ப­தாக கூறி­யுள்ள நிலையில் மொத்­த­மாக 51 வீத மக்கள் ஆத­ரவும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைந்தால் மொத்­த­மாக 65 வீத­மான வாக்­குகள் பிர­த­மரை எதிர்க்கும் அணியில் உள்­ளன. ஆகவே இவற்­றை­யெல்லாம் கருத்தில் கொண்டு பிர­தமர் உட­ன­டி­யாக தீர்­மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here