கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவா்களுக்கு புலமைப்பரிசில் நிதியாதாரங்கள் காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (30-03-2018) இடம்பெற்றது.
காசோலைகளை வழங்கி வைத்து உரையாற்றிய போது இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் ,
நாம் பல்வேறு வகையில் பின் தள்ளப்பட்டுள்ளோம்.குறிப்பாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளோம்.எம்மையும் எம் அடையாளங்களையம் யார் அழித்தாலும் மீண்டும் மீண்டெழ எமக்கு கல்வியே அடிநாதமாய் விளங்கி வருகின்றது.
இதனை நன்கு விளங்கிக்கொண்ட எம்முன்னோர்கள் சிறு வயதில் இருந்தே கல்வியையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து வந்தனர்.
இந்து சம்மேளனத்தின் கோரிக்கைகளை ஏற்று இம்மாணவர்களுக்கு உதவ முன்வந்த விஜயபாலன் மற்றும் கொழும்பு நடராஜா அவர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையில் எமது மாணவர்களுக்கு உதவ பல்வேறு உலக அமைப்புக்கள் எமது அமைப்பை அணுகி வருகின்றனர்.
நாமும் அவர்களோடு இன்முகத்தோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றோம்.எனினும் அவ்நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது
எமக்கு எமது மக்களின் துயர் துடைப்பே முக்கியமானது.இலங்கை அரசியல் உலக அரசியல் நலன்களுக்காகவும் நாம் எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை.
எமது நாட்டில் வசிக்கும் நல்ல மனம் படைத்த நல்லுள்ளங்களின் உதவியுடன் பலமான மக்கள் நலனோம்பும் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம்.இதன்மூலம் வறிய மாணவர்களை முன்னகர்த்தி எமது சமுதாயத்திற்கு மேலும் வலுச்சேர்ப்போம் என்றார்.
Home
ஈழச்செய்திகள் அடையாளங்களையும் யார் அழித்தாலும் மீண்டும் மீண்டெழ எமக்கு கல்வியே அடிநாதமாய் விளங்கி வருகின்றது !