போரில் தாயையும் சகோதரர்களையும் இழந்த மாணவன் பரீட்சையில் 9 ஏ சித்தி!

0
683

போரில் தனது தாய் மற்றும் 3 சகோதரர்களைப் பறிகொடுத்த முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவன் இராசேந்திரம் பிரதீபன் ஜி.சி.ஈ. சாதராணதரப் பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
”2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது எனது தாயும் மூன்று சகோதரர்களும் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் எனது மனதைப் பெரிதும் பாதித்திருந்தது. எனினும் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9 ஏ பெறுபேறுகளை பெற்றேன்” என்று பெருமை கொள்கிறார் அவர்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here