தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் நேற்று (29) சாவடைந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த இவர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்து 1998 வரை விடுதலைப் போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரால் பதிவு செய்யப்பட்டன.
சுவிஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்ந்த இவர் ஜெனிவா மனித உரிமை அமர்வில், தமிழினத்திற்கு சிறீலங்கா ஆட்சியாளர்களால் தமிழினத்திற்கு இளைக்கப்பட்ட அநீதியை வாக்குமூலமாக வெளிப்படுத்தியிருந்தவர். சிறீலங்காப் படைகளின் இன அழிப்புச் சாட்சிகளில் ஒருவராக இருந்த இவரது இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.