ஏற்க முடி­யாத கொள்கை கூட்­ட­மைப்­பி­னு­டை­யது!

0
205

ஒரு காலத்­தில் தேர்­தல் கூட்டு அல்­லது ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான கூட்­டுக்­களை அமைப்­ப­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் சப்­பைக்­கட்­டுக் கார­ணங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டு கேவ­ல­மான அர­சி­யல் நடத்­து­வதை தமிழ் நாட்­டில் பார்த்­தி­ருக்­கின்­றோம்.

கொள்கை ரீதி­யில் நேர் எதிர் எதிர் துரு­வங்­க­ளான கட்­சி­கள், தேர்­தல் கூட்­ட­ணி­களை உரு­வாக்­கு­வ­தை­யும் தேர்­த­லின் பின்­னர் ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்­கா­கப் பெரும் பேரம் பேசல்­க­ளு­டன் அதே­ போன்று கூட்­டணி அமைப்­ப­தை­யும், தமிழ்­நாட்டு அர­சி­ய­லின் கறுப்­புப் பக்­கங்­கள் என்று விமர்­சித்த காலம் போய், அது­போன்ற அர­சி­யலை விடு­த­லைப் போரா­ளி­க­ளின் குருதி ஆறு நனைத்­துப் புனி­த­மாக்­கிய மண்­ணில் இவ்­வ­ளவு விரை­வில் காணக்­கி­டைத்­தி­ருப்­பது தமி­ழர்­க­ளின் துர்­பேறு என்­ப­தைத் தவிர வேறு என்ன சொல்ல முடி­யம்?

நடந்­து­மு­டிந்த உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் நாடு முழு­வ­தும் பல சபை­க­ளி­லும் தொங்கு ஆட்­சியே சாத்­தி­ய­மாகி இருக்­கின்­றது. அது­ போன்று வடக்­கி­லும் பல சபை­க­ளில் தொங்கு ஆட்­சியே அமைந்­தி­ருக்­கி­றது. மூன்று சபை­கள் தவிர மற்­றைய எல்­லாச் சபை­க­ளி­லுமே ஆட்­சியை யார் அமைப்­பது என்­பது கேள்­விக்­கு­றி­தான்.

நடந்து முடிந்த இந்­தத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­க­ளில் பெரும்­பான்மை ஆச­னங்­களை வென்­றது. எனி­னும் அது ஆட்சி அமைப்­ப­தற்­குத் தேவை­யான அறு­திப் பெரும்­பான்­மை­யாக இருக்­க­வில்லை. ஒரு சில சபை­க­ளில் அந்­தப் பெரும்­பான்­மை­யை­யும் அது இழந்­தி­ருந்­தது. கூட்­ட­மைப்­பைத் தவிர்த்­துப் பார்த்­தால் மற்­றைய எல்­லாக் கட்­சி­கள், சுயேச்­சை­க­ளை­யும் சேர்த்­துப் பார்த்­தால் அவற்­றின் வசம் அதிக ஆச­னங்­கள் இருந்­தன. கடந்த தேர்­த­லில் கணி­ச­மான ஆச­னங்­களை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வென்­றி­ருந்­த­தும் இதற்­கொரு முக்­கிய கார­ணம்.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யி­லேயே உள்­ளு­ராட்சிச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­கும் பணி­கள் கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கின. வடக்­கில் முத­லா­வ­தாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆட்­சி­யைத் தீர்­மா­னிக்­கும் போட்­டியே நடை­பெற்­றது. தொடர்ந்து சாவ­கச்­சேரி, பருத்­தித்­துறை, வல்­வெட்­டித்­துறை என்­ப­வற்­றின் ஆட்­சி­க­ளும் தீர்­மா­னிக்­கப்­பட்­டன.

இன்­றைய நில­வ­ரப்­படி இந்த அனைத்­துச் சபை­க­ளி­லும் ஆட்­சி­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்­கின்­றது. நெடுந்­தீவு தவிர்ந்த ஏனை சபை­க­ளி­லும் இந்த நிலமை தொடர்­வ­தற்கே வாய்ப்­பு­க­ளும் அதி­க­முண்டு.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதிக உள்­ளு­ராட்சி சபை­க­ளின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யி­ருப்­பதை எண்ணி மகிழ்ச்­சி­ய­டைய வேண்­டிய தமிழ் மக்­கள், குறிப்­பாக தமிழ் அர­சுக் கட்சி ஆத­ர­வா­ளர்­கள், வெட்­கித் தலை­கு­னி­யும் நிலையே தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.

அதற்­குக் கார­ணம் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூட்­டுச் சேர்ந்­தி­ருக்­கும் தரப்­புக்­கள். இது­வரை கால­மும் எந்­தக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ் அர­சுக் கட்­சி­யும் அதன் வழியே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் பய­ணித்­த­னவோ அதி­லி­ருந்து முற்­றி­லு­மாக வில­கிச் செல்­லும் வகை­யி­லேயே கூட்­ட­மைப்­பின் செயற்­பாடு அமைந்­துள்­ளது.

இறு­திப் போர் வரை­யி­லும் இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் அவர்­க­ளின் உள­வா­ளி­க­ளா­க­வும், அர­சி­யல் ஏவ­லா­ளி­க­ளா­க­வும் செயற்­பட்டு வந்த தமிழ்க் கட்­சி­க­ளு­ட­னும் தன்­னு­டைய கட்சி அர­சி­யல் நல­னுக்­கா­கச் சேர்ந்து போகத் தயா­ராகி இருக்­கின்­றது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

கூட்­ட­மைப்­பின் இந்­தப் போக்­கும் பய­ண­மும் தமிழ் மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. இதே உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் மகிந்­த­வி­டம் தோல்­வி­ய­டைந்­த­வு­டனே புதிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளைக் கைவிட்டு தமி­ழர்­களை ஏமா­ளி­க­ளாக்க முய­லும் தெற்­கின் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­ட­னும் , சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­ட­னும் வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூட்­டணி வைத்­துக்­கொண்­டு­விட்டு, ஜெனி­வா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் போய் இலங்கை அர­சுக்கு நெருக்­கடி கொடுங்­கள் என்று கோரு­வது அர­சி­யல் ஏமாற்று அன்றி வேறென்ன?

தமிழ் மக்­க­ளின் நலன் கருதி ஒரு அர­சி­யல் கொள்­கை­யில் ஒற்­று­மைப்­பட்டு வர­மு­டி­யாத இந்­தக் கட்­சி­கள் அனைத்­தும், கட்சி அர­சி­யல் எனும் சுய­ந­லத்­திற்­காக ஒன்று சேர்ந்­தி­ருப்­ப­தைப் பார்க்­கும்­போது, நகைச்­சுவை நடி­கர் கவுண்­ட­மணி ஒரு திரைப்­ப­டத்­தில் கூறும் “அர­சி­ய­லில் இதெல்­லாம் சாதா­ர­ண­மப்பா!” என்­கிற வார்த்­தை­கள்­தான் நினை­வுக்கு வரு­கின்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அத்­த­கையை மிகக் கீழ் நிலை அர­சி­ய­லைத்­தான் நிகழ்த்­திக்­காட்­டி­யி­ருக்­கி­றது, தமிழ் மக்­க­ளின் விடு­த­லையை வென்­றெ­டுக்­கப்­போ­கின்­றோம் என்­கிற கோசத்­து­டன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here