ஐ.எஸ். தீவிரவாதிகள் தமக்கு எதிராக உளவாளிகளாக செயற்பட்டு தமது எதிராளிகளுக்கு தம்மைப் பற்றிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் 8 பேருக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று அந்த தீவிரவாத குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ காட்சியானது சிரியாவையும் ஈராக்கையும் உள்ளடக்கிய இயுபரேட்ஸ் பிராந்தியத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் வேனொன் றில் சிவப்பு ஆடை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்படும் மேற்படி 8 பேரும் இறைச்சி வெட்டும் கத்தியையொத்த நீண்ட கத்தியுடன் நின்ற தீவிரவாதிகளின் முன்பாக வரிசையாக மண்டியிட்டு அமர்ந்திருக்க பணிக்கப்படுகின்றனர்.
அந்த 8 பேரும் ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைக்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்புக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேற்படி வீடியோ காட்சியில் ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பின் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் விமானமொன்றை அமெரிக்க விமானியொருவர் செலுத்துவதை வெளிப்படுத்தும் காட்சியொன்று உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அது போலியான காட்சியென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேற்படி வீடியோ காட்சியில், கடவு ளின் தயவால் தாம் பழிதீர்ப்பதாக தீவிர வாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு லிபிய படைவீரர்களுக்கு சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு மரணதண் டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத் தும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு ஒரு சில தினங்களிலேயே இந்த புதிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.