மட்டக்களப்பு வானூர்தி நிலையம் மக்கள் போக்குவரத்துக்காக திறப்பு!!

0
228

 

மட்டக்களப்பு வானுர்தி நிலையம் மக்கள் வானூர்திப் போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக சிறீலங்கா வான்படையின் ஆக்கிரமிப்பில் இருந்த மட்டக்களப்பு வானூர்தி நிலையத்தை, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பொது வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.
அதன் பின்னர் வானூர்திப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆயிரத்து 400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.
இன்று பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்து தினமும் கொழும்பு நோக்கி தனியார் வானூர்தி பயண சேவைகள் நடைபெற உள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here