உலகப் பெண்கள் தினம்!

0
292

அனைத்துலகப் பெண்கள் தினம் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நுவசி லு குறோன் பகுதியில் 11.03.2018 அன்று பகல் 14.00 மணிக்கு Help For Tamil People  அமைப்புடன்  இணைந்து பிரான்சு பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்டது.


ஆரம்ப நிகழ்வாக 03.04.1996 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் பல்லவியின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து,
பெண்கள் நாட்டின் கண்கள் என்ற சொல்லுக்கு அமைவாக நாட்டிலே மிக உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறார்கள். இன் நிகழ்வில்  தமிழீழப் பெண்களின் வீரச்செயல்கள் திரையில் காட்டப்பட்டது.


தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சிப் பாடலுக்கான நடனமும், எழுச்சிப்பாடலும், பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர் Mme Marie-George Buffet சிறப்புரையும்.


தஞ்சாவூர் இணையக் கல்விக்கழக மாணவர்கள் இணைந்து உலகளாவிய ரீதியில் பெண்களின் சுதந்திரம் வளர்க்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா என்ற ஆயவரங்கமும்  இடம்பெற்று .
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here