பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நுவசி லு குறோன் பிராங்கோ தமிழ்ச்சங்கம் தனது 25 வது வெள்ளிவிழா நிகழ்வை தமிழ்ச்சோலைக் குழந்தைகளுடன் கொண்டாடியது.
நுவசி லு குறோன் பிறாங்கோ தமிழ்ச்சங்கமானது தனது 25 வது ஆண்டு வெள்ளிவிழாவை 11.03.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு SALON RIVER மண்டபத்தில் தமிழ்ச்சோலைக் குழந்தைகளின் தமிழ்மொழி கலைவெளிபாடுகளுடன் கொண்டாடியது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலினை பிரான்சில் நீண்ட காலமாக ஆசிரியர் பணியாற்றி வரும் திருமதி. புண்ணியமூர்த்தி;, தமிழர் ஒருங்கிணைப்புக் குழப் பொறுப்பாளர் திரு. மகேசுவரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் தேர்வுப் பொறுப்பாளர் திரு. அகிலன், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. காணிக்கைநாதன் மற்றும் நிர்வாக செயற்பாட்டாளர் திரு. மூர்த்தி , நுவசி லு குறோன் தமிழச்சங்கத் தலைவர், நிர்வாகி மற்றும் பெற்றோர் ஏற்றி வைத்தனர்.
அகவணக்கத்தை தொடர்ந்து, வரவேற்புரை, வரவேற்பு நடனம், மழலையர் பாடல், அறம், கார்த்திகைப்பூ நடனம், நாடகம் ( குறுகத்தரித்தது யார், தமிழ்த் தாயின் நிமிர்வு, சிந்தியுங்கள் செயற்படுங்கள், இடமாற்றமில்லை ) கவியரங்கம் , சைச்சங்கமம், காவடி , தண்ணுமை இசை, ஒயிலாட்டம், வாய்பாட்டு, பேச்சு, பட்டிமன்றம், ஆங்கிலப்பாடல், நாடகம் ( ஆங்கிலம், பிரெஞ்சு) மாணவர்களுக்கான மதிப்பளித்தல், தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தரம் 12 வரை கல்விபயின்று ஆசிரியர்களாக் கடமையாற்றுபவர்கள் மதிப்பளிகப்பட்டதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தமிழரின் தாரகப்பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.