13வது திருத்தச் சட்டத்தை விரைவில் அமுல்படுத்தல் அல்லது அதற்கும் அப்பால் செல்லுதல் சகல தரப்பினரின் அபிலாஷைகளை வலுப்படுத்தும்: நரேந்திரமோடி

0
115

modi13வது திருத்தச் சட்டத்தை விரைவில் முழுமையாக அமுல்படுத்துவது அல்லது அதற்கும் அப்பால் செல்வதானது தமிழர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் அபிலாஷைகள் நிறைவேற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

இரு நாட்டுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான விடயங்களை உள்ளடக்கியது என்பதால் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிறிது காலம் எடுக்கும். இரு நாடுகளும் இணைந்து நீண்டகாலத் தீர்வொன்றைக் காண்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், பிராந்தியத்தின் பெற்றோலிய கேந்திரநிலையமாக திருகோணமலையை மாற்றுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இதன் பின்னர் உரையாற்றும்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் உள்ளடங்கலான சகல இனங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், சமத்துவத்தைப் பேணுவதற்கும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் துணையாக நிற்போம்.

13வது திருத்தச்சட்டமூலத்தை விரைவில் முழுமையாக அமுல்படுத்துவது அல்லது அதற்கு அப்பால் செல்வதானது இந்த முயற்சிகளுக்கு மேலும் பலம்சேர்க்கும் என இந்தியா நம்புகிறது. இலங்கைக்கு வருகைதந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here