இராசா யன தாக்குதல் தொடர்பில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் ரஷ்யா பதில் அளிக்காததால் பிரித்தானிய 23 ரஷ்யா தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளது.
முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது பிரித்தானியாவில் வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சிக்கு ரஷ்ய அரசு தான் காரணம் என தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் ஓய்வுபெற்ற ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் லண்டனில் பொது இடத்தில ரசாயண தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு மயக்கமடைந்து கிடந்தனர்.
பிரித்தானிய அதிகாரிகள் நவீன ரசாயண விஷ பொருளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதி செய்ததை தொடர்ந்து இது ரஷ்ய அரசு நடத்திய தாக்குதலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.
பதிலளிக்க ரஷ்ய அரசுக்கு பிரித்தானிய பிரதமர் தெரசா மே கால அவகாசம் கொடுத்திருந்தார். ரஷ்யா எந்த பதிலும் அளிக்காததால் 23 ரஷ்யா தூதரக அதிகாரிகளை நீக்குவதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.