ஒரு­வார கால அவ­சர கால நிலை­மை ஒரு­வாரத்தை கடந்து சனிக்­கி­ழமை வரை தொடரும்!

0
129


கண்டி உள்­ளிட்ட சிறிலங்காவின்நா  பல பகு­தி­களில் ஆரம்­பித்த இன­வாத வன்­மு­றை­களை தொடர்ந்து ஒரு வார காலத்­துக்கு அமுலில் இருக்­கத்­தக்­க­தாக சிறீலங்கா ஜனா­தி­ப­தியால் அமுல் செய்­யப்­பட்ட  அவ­சர கால நிலைமை எதிர்­வரும் சனிக்­கி­ழமை வரை தொடரும் என அறிவிக்கப் படுகிறது.

தற்­போது ஜப்­பா­னுக்கு விஜயம் செய்­துள்ள சிறீலங்கா ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் சனிக்­கி­ழ­மையே நாடு திரும்பும் நிலையில் 18 ஆம் திகதி ஞாயி­றன்று  அவ­சரகால சட் டத்தை நீக்கும் வர்த்­த­மா­னியில் கையெ­ழுத்­தி­டுவார் என தக­வல்கள் தெரி­வித்­தன.

சிறீலங்காவில்  வைத்து இந் நாட்டு நேரப்­படி சிறீலங்கா ஜனா­தி­பதி குறித்த அவ­சர கால சட்ட வர்த்­த­மா­னியில் கையெ­ழுத்­திட்­டதால், மீண்டும் அதனை நீக்கும் வர்த்­த­மா­னி­யிலும் இங்கு வைத்தே கையெ­ழுத்­திட வேண்டும் என சுட்­டிக்­காட்­டிய அந்த தக­வல்கள் அதன் பிர­கா­ரமே எதிர்­வரும் 18 ஆம் திகதி இதற்­கான வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டு­வ­ரு­வ­தாக குறிப்­பிட்­டன.

இன­வாத வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன் கடந்த மார்ச் 6 ஆம் திகதி பிற்­பகல் 2.45 முதல் அமு­லுக்கு வரும் வகையில் அவ­சர கால சட்டம் பிறப்­பிக்­கப்­பட்டு வர்த்­த­மா­னி­யா­னது அன்­றைய தினம் இரவு வெளி­யி­டப்­பட்­டது.

ஒரு­வார காலத்­துக்கே அப்­போது அவ­சர கால நிலை­மையை நீடிக்க சிறீலங்கா அர­சாங்கம் முடிவு செய்­துள்­ள­தாக அறி­வித்­தி­ருந்­தது. அந்த ஒரு வார காலம் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்த போதும், அதனை நீக்­கு­வ­தற்­கான வர்த்­த­மா­னியில் கையெ­ழுத்­திட சிறீலங்கா ஜனா­தி­பதி நாட்டில் இல்­லா­ததால் அவ­சர கால சட்டம் தொடரும் நிலை உள்­ளது.

சிறீலங்கா ஜனா­தி­ப­திக்கு 10 நாட்­க­ளுக்கு அவ­சர கால நிலையை பிர­க­டனம் செய்யும் அதி­காரம் உள்­ளதால் சனிக்கிழமை வரை அவ­சர கால நிலைமை நீடிப்­பதில் சிக்கல் இல்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந் நிலையிலேயே எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு திரும்பும் சிறீலங்கா ஜனாதிபதி 18 ஆம் திகதி அவசரகால நிலைமையை நீக்கும் வர்த்தமானியில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது .

இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 37 வீடுகளும் 45 கடைகளும், 35 வாகனங்களும் சேதமடைந்தமை குறிப்பிடத் தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here