வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்தது.
வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக சிறீலங்கா படைகளால் கைது செய்யப் பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்ற நிலையில், இதனை முன்னிட்டு கண்டனப் பேரணியையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் இன்று முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமல் போனோரது உறவினர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது .
தங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.