பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

0
294


பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (14) அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு தங்களை பெருந்துயருக்கு ஆழ்த்தியுள்ளதாக அவரது பிள்ளைகள் லூஸி, ராபர்ட், டிம் ஆகியோர் கூறியிருக்கின்றனர். “எங்கள் அன்புத் தந்தை எங்களைவிட்டு பிரிந்தார். அவரது மறைவு எங்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, அசாதாரண மனிதர். அவரது பணிகளும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் பலரை கட்டிவைத்திருக்கிறது.
“இந்த அண்டம் நீங்கள் விரும்பும் மனிதர்களின் வசிப்பிடமாக இல்லாவிட்டால் அர்த்தமற்றதாக இருந்திருக்கும்” என்று ஒரு முறை அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ..
கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.
21-வயதில் மிகக்கொடிய நரம்பியல் நோயால் (amyotrophic lateral sclerosis) பாதிக்கப்பட்டார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்போது மருத்துவர்கள், ஸ்டீபன் 2 அல்லது 3 வருடங்கள் மட்டுமே வாழ்வார் என்றனர். முதலில் நோயால் மன அழுத்தத்துக்கு உள்ளான ஹாக்கிங் பின்னர் அதை உடைத்தெரிந்தார். முனைவர் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கனித பேராசிரியர் ஆனார்.
வாய்ஸ் சின்த்தசைஸர் எனப்படும் பேச்சு உருவாக்கி மூலம் அவர் உலகம் முழுவதும் ஆற்றிய உரைகள் லட்சோபலட்ச மக்களை அவர்பால் ஈர்த்தது. எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here