இந்தியாவின் ரோ மற்றும் மேற்கத்தேய உளவுப் பிரிவுகளே எனக்கு எதிராக அணி திரண்டன: மஹிந்த

0
110

Mahi sad_CIஇந்தியாவின் ரோ மற்றும் மேற்கத்தேய உளவுப் பிரிவுகளான சீ.ஐ.ஏ மற்றும் எம்.ஐ-6 ஆகியன தனது ஜனாதிபதி பதவிக்கு எதிராக அணி திரண்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது அவருடைய அரசாங்கமோ இதற்குப் பொறுப்பாகாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த சதித்திட்டம் தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கவலை வெளியிட்டி ருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். “கொழும்பில் உள்ள ஒருவரை மாற்ற வேண்டும் என நான் கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் இணங்கினார்கள். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு இறுதி நேரத்திலேயே அகற்றினார்கள். அது காலம் கடந்துவிட்டது” என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ரோ அரசியல் வழிகாட்டலின் கீழ் அவ்வாறு செயற்பட்டது என நீங்கள் கருதுகிaர்களா எனக் கேட்கப்பட்ட கேள் விக்குப் பதிலளித்த மஹிந்த ராஜ பக்ஷ, “இல்லை, இல்லை, நான் ஒரு போதும் மோடியை குற்றஞ்சாட்ட வில்லை” என்று கூறியுள்ளார்.

“ஏன் எனில் குறித்த நபர் ஒரு வருடத்துக்குள்ளேயே வந்தவர். இது நீண்டநாள் திட்டமாகும். சீனா விடயத்தில் அவர்கள் என்னைப் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டனர். அதனாலேயே அவர்கள் இதனைத் திட்டமிட்டனர்” என மஹிந்த ராஜபக்ஷ தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் அவர் பதிலளிக்கும் போது தனது குடும்ப உறுப்பினர்கள் பழிவாங்கப்படுவது தொடர்பில் சற்று கோபமடைந்திருந்ததாக ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

“அவர்கள் குடும்ப உறுப்பினர்களைப் பழிவாங்காவிட்டால் இந்த அரசாங்கத்துக்கு நான் ஆதரவளித்திரு ப்பேன்.

ஆனால் அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்து எம்மை சிறைக்குள் அடைக்கப் பார்க்கின்றனர். எதுவித சாட்சியங்களுமின்றி கடவுச்சீட்டுக்களை தடுத்து வைத்துள்ளனர். இவ்வாறான நிலையில் நான் எவ்வாறு ஓய்வுபெற முடியும்? ஓய்வுபெறப் போகின்றேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

தற்பொழுது நான் தற்காலிகமாக ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here