கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து யாழில் கண்டன போராட்டம் இன்று (13) இடம்பெற்றது.
யாழ்.பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில்
சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி ஆகியன இப் போராட்டத்தில் பங்கேற்றன .