அம்பாறை கண்டி வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் !

0
324

குற்றம் புரிந்தவர்களை அல்லது குற்றம் புரிந்தவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை சாதி, இனம், மொழி, சமூகம் மற்றும் மதம் என்பனவற்றினூடாக அன்றி நீதி, சட்டம் போன்ற காரணிகளூடாக நோக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையிலும், கண்டியிலும் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நம்மவர்கள் என உயர் அரசியல்வாதிகள் அடையாளப்படுத்தியதாலேயே இன்று சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு ஏற்றால்போல செயற்பட்டால் தமக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் செயற்படுவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்கள் இனப்பிரச்சினையாக மாறாதிருப்பதற்கு பொலிஸார் போதிய பயிற்சிகளைப் பெற்று செயற்படுவது அவசியம் எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸ் மா அதிபர் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் வடக்கு  மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here