இந்திய மத்திய அரசில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தெலுங்குதேசம் இடையேயான கூட்டணி முறிந்தது. பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்தும் தெலுங்குதேசம் வெளியேறியது.
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதைக் கண்டித்து பாஜகவுடனான கூட்டணியை தெலுங்குதேசம் முறித்துக் கொண்டுள்ளது. அத்துடன் மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் தமது பதவிகளில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.