ஓராண்டை பூர்த்தி செய்துள்ள நிலையில் முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் !

0
210

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது.
கடந்த காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விசேடமாக யுத்தம் முடிவடைந்து, இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது பிள்ளைகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடர்வோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறீலங்கா அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவையாக தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில் சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது போரடடத்துக்கான தீர்வினை சர்வதேசமே தர வேண்டும் எனவும் மக்கள் கோருவதுடன், நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் தமக்கான ஒரு உறுதியான தீர்வு பெற்றுத்தரப்படவேண்டும் எனவும் ஜெனீவாவுக்கான மகயர் ஒன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக அவசரகால நிலை பிரகடனப்படுத்துள்ளப்பட்டுள்ள இந்த நிலையில் மிகவும் அமைதியான முறையில் பதாதைகளை தாங்கியவாறு, மகளிர் தினமான இன்று வீதியில் கறுப்பு துணிகளை தலைகளில் கட்டி அமைதியான முறையில் போராட்டம் இடம்பெறுகிறது.


இன்றைய இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
உறவினர்கள் பகிரங்க அழைப்பு விடுத்து இதுவரை அரசியல் பிரமுகர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here