சிறீலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 369 ஆவது நாளாக இன்று (06) இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது..
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் மார்கழி 28 ம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.
எனினும் 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமக்கான தீர்வினை சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்காத நிலையில் ஜெனிவாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாபுலவு மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளார்.
Home
ஈழச்செய்திகள் ஒருவருடம் கடந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கேப்பாபுலவு மக்கள் அழைப்பு !