மக்களை நேசிக்கும் பண்பான மனிதர்கள் தமிழ் மக்கள் பேரவை யில் இணையலாம் !

0
239


மக்களை நேசிக்கும் பண்பான மனிதர்கள் அரசியலில் சேராவிட்டாலும், மக்கள் இயக்க மாகப் பரிணமித்திருக்கும் தமிழ் மக்கள் பேரவை யில் இணையலாம் என வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத் துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான மு.சிற்றம் பலம், சட்டத்தரணி தொழிலில் ஈடுபட்டு 50 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளன. அதனை முன்னிட்டு வவுனியா சட்டத்தரணிகள் சங் கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் கடந்த சனிக்கிழமை (03) நடைபெற்ற நிக ழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டத்தரணி சிற்றம்பலத்தின் உழைப்பா லும் மேற்பார்வையாலும் 2007 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 3ஆம் திகதி மேல்நீதிமன் றம், 2011ஆம் ஆண்டு புரட்டாதி 29ஆம் திகதி குடியியல் மேன்முறையீட்டு நீதிமன் றம் ஆகிய நீதிமன்றங்கள் வவுனியாவில் உருவாகின.
1980ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தலைவரானார். அவரின் அந்தப் பதவிக்கால த்தில்தான் மாவட்ட செயலக நுழைவாயிற் பகுதியில் பண்டாரவன்னியனின் சிலையை நிறுவினார். அதன் பின்னர் வவுனியா மாவ ட்ட நகரசபை உப தலைவராகக் கடமை யாற்றினார்.
1990ஆம் ஆண்டில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கனடா சென்றார். அங்கு பிரஜா உரிமை கிடைத்த போதிலும் மீண்டும் நாடு திரும்பினார். வவுனியா நீதி மன்ற பிரகாரத்தில் ஒரு சட்டநூலகத்தைத் திறக்க முன்னின்றார். 2011ஆம் ஆண்டு புர ட்டாதி 29ஆம் திகதியன்றுஅந்தநூல் நிலை யம் திறக்கப்பட்டது.
மேலும் சட்ட உதவி ஆணைக்குழுவின் வவுனியா பணிப்பாளராக அவர் 10 வருடங்க ளுக்கு மேல் கடமையாற்றினார். அவரது சேவையின் பொருட்டு அவருக்கு விருதும் கிடைத்தது. கடந்த 2012ஆம் ஆண்டு கார்த் திகை மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத் தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண் டார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக அவர் பதில் நீதவானாகவும் கடமைபுரிந்து வருகின்றார்.
அரசியலினுள் நுழைய பல சந்தர்ப்பங் கள் எழுந்தும் அவர் அவற்றைப் புறக்கணி த்தே வந்துள்ளார். அவரைப் போன்ற மக் களை நேசிக்கும் பண்பான மனிதர்கள் அர சியலில் சேராவிட்டாலும் மக்கள் இயக்க மாகப் பரிணமித்திருக்கும் எமது தமிழ் மக் கள் பேரவையிலாவது சேர்ந்து எமக்கு உதவ வேண்டும் என வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here