பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளினால் வடக்கில் தொடரும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள் தொடர்தவண்ணம் உள்ளன.இன்று முற்பகல் 11 மணியளவில் பரந்தன் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை இருசகர வண்டியில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததொடருந்து மோதியே குறித்த நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.