அக்கினி விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

0
279


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் அக்கினி விளையாட்டுக் கழகம் அமரர் லியோனஸ்பெலஸ்மன் அல்பிரேட் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி முதற் தடவையாக பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சேர்ஜியில் தொடர் மழைக்கு மத்தியில் 09 கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றி இன்று காலை 9.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை இடம் பெற்றன.

பொதுச்சுடரினை பிராங்கோ தமிழ்ச் சங்கம் சேர்ஜி உபலைவர் பழனிவேல் உருத்திரகுமாரன் ஏற்றி வைத்தார்.
பிரான்சின் தேசியக் கொடியினை சேர்ஜி நகரசபை உறுப்பினர் திரு Jean-Paul JEANDON அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் ஆறுமுகதாஸ் அகாஷ்  ஏற்றிவைத்தார்.


ஈகைச்சுடரினை 14.05.1985 அன்று வில்பத்து காட்டுப்பகுதியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் விழுப்புண் அடைந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன் பிரசன்னாவின் சகோதரர் ஏற்றிவைத்தர்.

 

1998 மூன்றுமுறிப்பு பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன் கரிகாலனின் சகோதரர் மலர் வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் முன்னைநாள் தலைவர் அமரர் லியோனஸ்பெலஸ்மன் அல்பிரேட் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அவரது துணைவியாரும் பிள்ளைகளும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து,

13 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
15 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை அக்கினி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை யாழ்டன் விளையாட்டன் விளையாட்டடுக் கழகமும், மூன்றாம் இடத்தை விண்மீன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
15 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை இளம் தமிழர் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை விண்மீன் விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக் கழகம் 93 உம் பெற்றுக் கொண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here