மதத்தின் பெயரால் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றனர்!

0
248

 


தமிழர் தாயகப் பகுதியான வட பகுதியிலுள்ள சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 அளவில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆதீன முதல்வர்கள், துறவிகள் முன்னிலை வகிக்க சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள், தர்மகத்தா சபைகள் இந்து மக்கள் ஓண்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.


நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து கோவில் வீதி ஊடாக சென்ற ஆர்பாட்டகாரர்களின் பங்குபற்றுதலுடன் கைலாய பிள்ளையார் ஆலயத்தில் கூட்டுப்பிராத்தனை இடம்பெற்றது்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வட மாகாண முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியவர்கள், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
அத்துடன் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மதத்தின் பெயரைக்கொண்டு சிலர் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குற்றம் சுமத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here