சிரியாவில் இடம் பெறும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழர் தாயகத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 28.02.2018 அன்று யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பிலும் இன்று மன்னார், வவுனியாவிலும், மலையகததிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது. என போராட்டத்தில் பங்கு பற்றியோர் தெரிவித்தனர்.
இன்று மலையகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் 2009 இல் இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்தது, அந்தவகையில் மலையக மக்கள் சார்பில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் தெரிவித்தனர். அத்தோடு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடதக்கது.
இன்று வவுனியாவில் இடம் பெறும் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது அதில் சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே இதன் வலியை வெளிப்படுத்த வவுனியாவின் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (03.03.2018) மாபெரும் கண்டன அமைதிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது .
இக் கண்டன அமைதிப்பேரணி வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா பழைய பஸ்நிலையத்தில் முடிவடைய உள்ளது.
எனவே வவுனியாவின் அனைத்து இளைஞர் யுவதிகளையும் ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.