வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் சபாரட்ணம் குக தாஸின் கன்னி உரையை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை க்கு அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவைத்தலைவரு க்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் (27) அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் யாழ்.மாநகர சபைத்தேர்தலில் போட்டியிட்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்டுக்காக சபாரட்ணம் குகதாஸ் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
அவர் தனது கன்னியுரை யில், இறுதிப் போரில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கூட இராணுவம் மக்கள் மீது சூடு நட த்தி கொன்றது. இறுதி போரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரையில் கொல் லப்பட்டார்கள். பின்னர் எங்களை முகாம்க ளில் தடுத்து வைத்து சித்திரவதை செய்தார் கள்.
ஒரு நாளைக்கு குடிப்பதற்கு 2 லீற்றர் தண் ணீரும், குளிப்பதற்கு 5 லீற்றர் தண்ணீPரும் தந்தார்கள். உணவு ஒழுங்காக தரவில்லை. உணவு இல்லாமல் கூட சிலர் உயிரிழந்தா ர்கள். இவ்வாறு எமது துன்பங்களுக்கும் இராணுவத்தின் படுகொலைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க வும் போவதில்லை, மன்னிக்கவும் போவதி ல்லை. இலங்கை அரசு ஐ.நாவில் மழுப்பல் பதிலை கூறி பொறுப்புக்கூறலில் இருந்து தப் பித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் நாங் கள் சரியான முறையில் செயற்படாவிட்டால் அது வரலாற்று தவறாகிவிடும்.
ஆகவே வடக்கு மாகாண முதலமைச்சர் எமது அரசியல் தலைவர்களை ஒன்றிணை த்து இதற்காக செயற்பட வேண்டும் என்றார். இவரது உரை இறுதி போரில் நடைபெற்ற படுகொலைகளுக்கு சாட்சியாக காணப்படுவ தால் உரையை ஐ.நா மனிதவுரிமை பேரவை க்கு அனுப்பி வைக்குமாறு அவைத்தலைவருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்