யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெருந்துன்பங்களை அனுபவித்ததுடன், தமது உறவுகளையும் இழந்த நிர்க்கதி நிலைக்கு உள்ளான பல குடும்பங்கள் வீட்டுத்திட்டங்களுக்கான புள்ளியிடல் முறைகளுக்குள் உள்வாங்கப்படமாலும் தமக்கான சொந்தக்காணிகள் இல்லாமலும் தமக்கான வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளமுடியாமல் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 12,882 குடும்பங்களின் வீட்டுத்தேவைகளை நிறைவு செய்யவேண்டியுள்ளதாகவும் யுத்தத்தின் பின்னரான மீள்குடி யமர்வையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதிஉதவிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 43,155 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிதிகளினூடாக இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், இதுவரை 22,189 புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த 4,382 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ன என்றுதெரிவித்ததுடன்.
மீள்குடியேறிய 11,786 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கவேண்டியுள்ளது. சேதமடைந்த 1,096 வீடுகளை புனரமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Home
ஈழச்செய்திகள் உறவுகளையும் இழந்த நிர்க்கதி நிலைக்கு உள்ளானவர்கள் வீட்டுத்திட்டங்களுள் உள்வாங்கப்படவில்லை !