சிறீலங்காவின் நாடுகடந்த கொலை அச்சுறுத்தலைக் கண்டித்து பிரான்சில் இடம் பெற்ற கண்டன ஒன்றுகூடல்!

0
671


லண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’ என்று சைகை காட்டி எச்சரித்து லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வன் செயலை கண்டித்து இன்று (28) 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை பிரான்சு சிறீலங்கா தூதரகத்திற்கு அருகமையில் கண்டன ஆர்பாட்டம் பெற்றது.


கடும் குளிரான காலநிலையிலும் தேசியக் கொடியை ஏந்தியவாறும், பிரித்தானியாவில் கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவத்தினனின் உருவம் தாங்கிய பாதகைகளை தாங்கியவாறு கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.

2009 இல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னரும் அடுக்கு முறை தொடர்வதாகவும் தமிழர் தாயகம் விடுதலை அடையும் வரை இப்படியான போராட்டங்கள் தொடரும் என்றும், பிரித்தானியாவில் இடம் பெற்ற கொலை அச்சுறுத்தலையும் கண்டித்து இளையோர் உரையாற்றினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here