பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் அமாரி விஜேவர்தன தனது பதவி விலகி உள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரின் பதவி காலம் தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இருந்தது.
எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தாம் பதவிவிலகுவதாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பிரித்தானியாவுக்கான சிறீலங்கா உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 04.02.2018 அன்று சிறீலங்கா சுதந்திர தினத்தில் பிரித்தானியாவாழ் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது சிறீலங்கா தூதரக பாதுகாப்பு அதிகாரியால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோதமிழரை நோக்கி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் எதிரிலியாக பிரித்தானிய அரசின் வலியுறுத்தலாலேயே சிறீலங்கா தூதுவர் பதவி விலகி உள்ளார் என அறியப்படுகின்றது.
இதே வேளை கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவத்த தளபதி இன்று சிறீலங்கா திரும்புவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
மைத்திரி அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் பிரித்தானியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.