மைத்­திரி – ரணில் கூட்டு அரசை காப்பாற்ற முனையும் மேற்­கு­லகு!

0
210

மைத்­திரி – ரணில் கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரை தொடர வேண்­டும். முன்னாள் அரச தலைவர் மகிந்த ஆத­ர­வு­டன் புதிய அரசு அமை­யு­மா­னால் இலங்­கைக்­கான அனைத்து உத­வி­க­ளும் நிறுத்­தப்­ப­டும். இவ்­வாறு கொழும்­பில் உள்ள மேற்­கு­லக நாடு­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.
நல்­லாட்சி அர­சைத் தொடர்ந்து செயற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­ யான உத­வி­களை மேற்­கு­லக நாடு­கள் வழங்­கும். 2020ஆம் ஆண்­டு­வரை மைத்­திரி – ரணில் கூட்­டாக ஆட்சி செய்ய வேண்­டும் என்று ஆலோ­ச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன.
மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது சகாக்­கள் மீண்­டும் ஆட்­சி­யில் அல்­லது அரசை நிர்­ண­யிக்­கும் சக்­தி­யாக உரு­வா­கி­வி­டக் கூடாது என்று மேற்­கு­லக நாடு­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­கள் எடுத்­து­ரைத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.
மைத்­திரி – ரணில் நல்­லாட்சி குழப்­ப­ம­டைந்து, மகிந்த ஆத­ ர­வு­டன் புதிய அரசு அமை­யு­மா­னால் நிதி­யு­த­வி­கள் உள்­ளிட்ட அனைத் துச் சலு­கை­க­ளும் நிறுத்­தப்­ப­டும் என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீலங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு அமெ­ரிக்க இரா­ஜ­தந்­திரி ஒரு­வர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் என்­றும் தக­வல்­கள் கூறு­கின்­றன.
உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த அணி பெருவெற்றி பெற்ற செய்தி வெளியானபோது சிறீலங்காவிற்கான இந்திய மற்றும் அமெரிக்க தூதுவர்கள் சிறீலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து மைத்திரி – ரணில் ஆட்சி தெடரவேண்டும் என கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here