தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (17)சிறப்பாக இடம் பெற்றன.
ஆரம்ப நிகழ்வாக 13.05.1984 அன்று பொலிகண்டியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பகீன் உடைய சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும் இடம்பெற்றன .
இறுதிப் போட்டிகள் நாளை (18) புளோமினில் மண்டபத்தில் நடைபெற்று வன்னிமயில் 2018 விருதும் முதல் மூன்று நாள் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்வர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற உள்ளன.