பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞருமான லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு (13) குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி மகிந்த ஆட்சிக் காலத்தில் கல்கிசை பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.
இக் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிபர் இன்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்கிரமதுங்க சிறீலங்கா அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை “சண்டே லீடர்’, மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான “இருதின’ என்பன வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.