இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று சிறிலங்கா விஜயம்; நாளை வடபகுதி செல்கிறார்!

0
110

modi-newஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி  இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை செல்கிறார். இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடையும் இந்தியப் பிரதமருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படுகின்றது. அதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் செங்கம்பள வரவேற்பளிக்கப்படவும் ஏற்பாடாகியுள்ளதுடன் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையும் அங்கு இடம் பெறுகின்றது.

சுமார் இரு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் இந்தியத் தலைவர் என்ற வகையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கெளரவமளிக்கப்படவுள்ளது. இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்க ப்பட்டு இந்தியப் பிரதமர் கெளர விக்கப்படவுள்ளார்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பாராளுமன்றத்திற்குச் செல்லும் நரேந்திரமோடி அங்கு விசேட உரையாற்றவுள்ளார். பாராளு மன்றத்தில் அரசியல் தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடவுள்ள அவர் குறிப்பாக மலையக அரசியல் தலைவர்கள் அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.

நாளை 14 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் அநுராதபுரத்துக்கு விஜயம் செய்வதனையடுத்து தலை மன்னாருக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடி மன்னார் தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

நாளை மதியம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளும் மோடி யாழ். பொதுநூலகத்தைப் பார்வையிடுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தையொட்டி கொழும்பு உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவினரும் விசேட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here