ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வந்தாலே விபூசிகா விடுவிக்கப்படுவார்; ஆவணங்களை ஒப்படைக்குமாறு ஜெயக்குமாரி கோரிக்கை!

0
182

jeyakumari_பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தான் கைது செய்யப்பட்ட போது எடுத்துக்கொண்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தன்னிடம்  ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்றத்திடம்  இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.    அதற்கமைய விசாரணைக்கு குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  மாகாதேவா ஆச்சிரமத்தில் உள்ள ஜெயக்குமாரியின்  மகள்  விபூசிகாவை தாயுடன் சேர்ப்பது தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    எனினும்  ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகை தந்தபின்னரே நீதிமன்றின் ஊடாக விபூசிகா விடுதலை செய்யப்படுவார் என்று கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸாரால் எடுக்கப்பட்ட ஆவணங்களை மீள கையளித்த பின்னர் தான் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து கிளிநொச்சிக்கு வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here