நிதி முறைக்கேடுகள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளை உள்ளடக்கிய கறுப்பு பட்டியலில் சிறீலங்கா ; உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று (07) நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணச்சலவை மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறுவதாக குற்றம்சாட்;டப்பட்டு, சிறீலங்கா, டியூனீசியா, ட்ரினேட் மற்றும் டொபாகோ குடியரசு ஆகிய நாடுகளை குறித்த கறுப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
அதற்கமைய இதற்கான வாக்கெடுப்பு நேற்று (07) நடைபெற்றுள்ளது. இதன்போது, குறித்த பரிந்துரைக்கு ஆதரவாக 375 வாக்குகளும், எதிராக 283 வாக்குகளும் அளிக்கப் பட்டுள்ளது..
இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முறைக்கேடுகள் குறித்த கறுப்பு பட்டியலில் சிறீலங்கா இணைக்கப்பட்டுள்ளது .