70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசியப்பிரச்சனையில் சிங்களத்தின் அடக்குமுறை தொடர்கிறது!

0
185

சிறீலங்காவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பட்ட ஒன்று கூடலில் பங்குபற்றிய மக்களை பார்து சிறீலங்கா தூதரகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தலைக் கண்டித்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் கண்டன அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில்,
சிறீலங்கா தேசத்தில் தமிழ்மக்கள் மீதான இனவேற்றுமையில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வருகின்ற நிலைப்பாடே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அது தொடரத்தான் போகின்றது என்ற நிலையில் சர்வதேசம் தனது நலன்களுக்கு சிறீலங்கா தேசம் என்பது இன்று தேவையானதொரு நாடாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றது. அதற்காகவே தமிழர்களின் இனப்பிரச்சனையை நீறுபூத்த நெருப்பாக வைத்திருக்கவும் நினைக்கின்றது. அதனால்தான் கடந்த 2015ல் பதவியேற்றுக்கொண்ட மைத்திரி அரசின் பொய்ப்பரப்புரைகளையும், செயற்பாடுகளையும், நம்பிக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இலங்கைத்தீவில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது அதனால் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சிறீலங்கா தேசத்தில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போன்று பல தமிழினப் படுகொலை இராணுவமும்,கடற்படையினரும், புலனாய்வினரும், ஒட்டுக்குழுக்களும், இனத்துரோகிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். என்று தொடர்ந்து செல்கின்றது. அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here