புலத்தில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா தூதுவராலயத்தினர் !

0
364


இனப்படுகொலை சிறீலங்கா அரசின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறீலங்கா ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்று (05) பிரான்சு சிறீலங்கா தூதரகத்திற்கு அண்மையில் அணிதிரண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் தூதரகத்தை சேர்ந்தவர் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு அண்மையில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் பெருமளவு மக்கள் அணிதிரண்டதில் அச்சம் கொண்ட பிரான்சு துதரகத்தினர் பெருமளவில் காவல் துறையின் பாதுகாப்பை பெற்று துதரக சுற்றுப்புறத்தில் பெருமளவு பிரான்சு காவல் துறையினரின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை பிரித்தானியா சிறீலங்கா தூதரகத்தின் முன்னால் நேற்று (04) அணிதிரண்ட மக்களை சிறீலங்காவின் இராணுவ அதிகாரி ஒருவர் தூதரக வாயிலிருந்து கழுத்தை வெட்டு வேன் என அச்சுறுத்தும் காணெலி வெளிவந்து புலம் பெயர் மக்களின் கொந்தளிப்பை ஏற்படுதியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here