வடக்கு- கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்குறித்த விடயம் தெரி
விக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசார கூட்டம் நேற்று வவுனியாவில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் எனும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைப்பதற்கு 500 மில்லி யன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நல்லிணக்கம் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிட ப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையி லேயே ஐ.தே.க வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த நிகழ்வில் உரையா ற்றுகையில், பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள் இன்று இன, மத ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். இந்து முஸ்லிம், பௌத்த மக்கள் ஒற்றுமையாக உள்ளார்கள் என குறிப்பிட்டிருந்தார்.